உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேரோடும் வீதி ஆக்கிரமிப்பு

தேரோடும் வீதி ஆக்கிரமிப்பு

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தேரோடும் வீதியில் ரோடு ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு, தேரோடும் வீதியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சிறிய தெருக்கள் உள்ளன. சில இடங்களில் ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் ரோட்டோரத்தில் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழாய் ரோட்டின் மைய பகுதியில் செல்லவதால், பைக்கில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும், இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள சில குடியிருப்புகளில் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து, படிக்கட்டு, வாகனம் நிறுத்த இடம் மற்றும் துவைக்கும் கற்கள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி