உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமி பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள்

சிறுமி பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள்

கோவை; பொள்ளாச்சியை சேர்ந்தவர் மாறன்,58, கூலித்தொழிலாளி. 16 வயது சிறுமி ஒருவருக்கு, ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார்.வெளியே சொல்லக்கூடாது என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது, சிறுமியின் குடும்பத்துக்கு தெரிந்ததும், 2025, ஜன., 11ல், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது, கோவை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், மாறனுக்கு சாகும் வரை ஆயுள் சிறை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை