உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிமையியல் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

குடிமையியல் உரிமைகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை;கோவையில் தீண்டாமை மற்றும் குடிமையியல் உரிமைகள் குறித்த கருத்தரங்கு, இன்று நடக்கிறது.கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் படி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், தீண்டாமைக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகள் குற்றங்கள், குடிமையியல் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடக்கிறது.கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையத்திலுள்ள, காவலர் சமுதாய கூடத்தில் இன்று காலை 10:00 மணிக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கிறது. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் பங்கேற்கின்றனர். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பங்கேற்று நடைமுறை செயல்பாடுகள் குறித்து விளக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்