மேலும் செய்திகள்
பாட்டுக்கு ஒரு தலைவன்; அசத்தும் கம்பீர குரல்
07-Nov-2024
கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகள் மட்டுமே, ஆரம்பத்தில் செம்மொழிகளாக கருதப்பட்டன. அதன் பின், சமஸ்கிருதம் செம்மொழி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. 1816ம் ஆண்டில் புகழ்பெற்ற அறிஞர் எல்லிஸ் தனது அறிக்கையில், திராவிட மொழிகள், சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டவை எனவும் மற்றும் அவற்றின் தொன்மையையும் நிரூபித்தார்.டாக்டர் ராபர்ட் கால்டுவெல், 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் விரிவாக ஆராய்ச்சி செய்து, திராவிட மொழிகளில் தமிழ், தனித்துவமான சொற்களஞ்சியம் என்றும், இலக்கியத்துடன் சமமான பழமையான மொழி என்றும் உலகுக்கு அறிவித்தார். இவருக்கு முன்பே, பல தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழியின் தனித்துவமான அம்சங்களை கூறியுள்ளனர்.அவர்களுள் முதன்மையானவர், கி.பி.18ம் நுாற்றாண்டை சேர்ந்த மாதவ சிவஞான முனிவர் ஆவார். அவர், தமிழ் மொழியின் சொல்லாடல்களையும், இலக்கணங்களையும் ஒப்பிட்டு பார்த்தார். தொல்காப்பியத்தின் மிகத் தொன்மையான தமிழ் இலக்கணத்தின் முன்னுரையை பற்றிய அவரது விரிவான வர்ணனை குறிப்பிடத்தக்கது. அவரது ஆய்வுகள் வாயிலாக, தமிழின் பல அம்சங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.இந்திய அரசு, 2004ம் ஆண்டு தமிழை செம்மொழியாக அங்கீகரித்தது. 2010ம் ஆண்டு கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவாக, சிறப்பு அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது. (நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்).
07-Nov-2024