உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

அன்னுார்:ஓரைக்கால்பாளையத்தில், அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நேற்றுமுன்தினம் துவங்கியது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், பல்வேறு பதவிகளுக்கு, போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓரைக்கால் பாளையத்தில், அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு பீமா ராவ் வானவில் நற்பணி சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம் துவங்கியது.இதில் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், முது கலை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பயிற்சி அளித்தனர். நிர்வாகிகள் பேசுகையில், 'ஒவ்வொரு ஞாயிறன்றும் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம். எந்த கட்டணமும் இல்லை. மேலும் விவரங்களுக்கு 97881 75764 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி