உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க் செய்ய கோரிக்கை

பொள்ளாச்சி-கோவை ரோட்டில் "பேட்ஜ் ஒர்க் செய்ய கோரிக்கை

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை செல்லும் மெயின்ரோட்டில் மீண்டும் குழிகள் அதிகரித்துள்ளதால், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும். பொள்ளாச்சி-கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோடு புதுப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், ரோட்டில் குழிகள் அதிகரித்துள்ளன. இவ்வழியாக பஸ், லாரி, டெம்போ, கார், டூ-வீலர்கள் அதிகளவில் செல்கின்றன. அப்போது, ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் குழிகளுக்கு 'பேட்ஜ் ஒர்க்' செய்ய வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை