கோவை:கோவை லோக்சபா தொகுதியில், 64.81 சதவீதமே ஓட்டுப்பதிவாகி இருக்கிறது. ஆண்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமாக ஓட்டளித்திருக்கின்றனர்.கோவை லோக்சபா தொகுதியில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6 லட்சத்து, 79 ஆயிரத்து, 142 ஆண்கள், 6 லட்சத்து, 85 ஆயிரத்து, 746 பெண்கள், 87 மூன்றாம் பாலினத்தவர் என, 13 லட்சத்து, 64 ஆயிரத்து, 975 வாக்காளர்கள் ஓட்டளித்திருக்கின்றனர். இது, 64.81 சதவீதம்.ஆண்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகமாக ஓட்டளித்திருக்கின்றனர். சதவீதம் அடிப்படையில், 75.33 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்து பல்லடம் தொகுதி முதலிடத்தில் இருந்தாலும், கவுண்டம்பாளையம் தொகுதியில் தான், மிக அதிகமாக, 3 லட்சத்து, 12 ஆயிரத்து, 389 ஓட்டுகள் பதிவாகியிருக்கின்றன.மிக குறைவாக, கோவை தெற்கு தொகுதியில், ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 16 ஓட்டுகளே பதிவாகியுள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக
சூலுார் தொகுதி: பதிவானவை - 2,44,734 ஆண் -1,20,037, பெண் - 1,24,659, மூன்றாம் பாலினத்தவர் - 38. சதவீதம் - 75.33.பல்லடம் தொகுதி: பதிவானவை - 2,68,195 ஆண் - 1,34,504, பெண் - 1,33,688, மூன்றாம் பாலினத்தவர் - 3. சதவீதம் - 67.42.கவுண்டம்பாளையம் தொகுதி: பதிவானவை - 3,12,389 ஆண் - 1,35,414, பெண் - 1,56,945, மூன்றாம் பாலினத்தவர் - 30. சதவீதம் - 66.42.சிங்காநல்லுார் தொகுதி: பதிவானவை - 1,96,109 ஆண் - 97,463, பெண் - 98,642, மூன்றாம் பாலினத்தவர் - 4. சதவீதம் - 59.33.கோவை தெற்கு தொகுதி: பதிவானவை - 1,45,016 ஆண் - 72,264, பெண் - 72,745, மூன்றாம் பாலினத்தவர் - 7. சதவீதம் - 59.25.கோவை வடக்கு தொகுதி: பதிவானவை - 1,98,532 ஆண் - 99,460, பெண் - 99,067, மூன்றாம் பாலினத்தவர் - 5. சதவீதம் - 58.74.
2014, 2019தேர்தல் ஒப்பீடு
2019ல் நடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், அப்போது, 63.86 சதவீதம் ஓட்டுப்பதிவாகியிருந்தது. இப்போது, 64.81 சதவீதம் பதிவாகியுள்ளது. இது, 0.95 சதவீதமே அதிகம். 2014ல் நடந்த (68.40 சதவீதம்) தேர்தலுடன் ஒப்பிடுகையில், 3.59 சதவீதம் குறைவு.வாக்காளர்கள் எண்ணிக்கையை ஆய்வு செய்தால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில், 13 லட்சத்து, 64 ஆயிரத்து, 975 வாக்காளர்கள் ஓட்டளித்திருக்கின்றனர். 2019ல் 12 லட்சத்து, 45 ஆயிரத்து, 644 வாக்காளர்கள், 2014ல் 11 லட்சத்து, 59 ஆயிரத்து, 192 வாக்காளர்கள் ஓட்டளித்திருக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டுப்போடும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது தெரிகிறது. வாக்காளர் பட்டியல் தவறாக இருப்பததால், ஓட்டு சதவீதம் குறைவாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரித்தால், 90 சதவீதம் ஓட்டு பதிவாகும் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.