உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடன் தொல்லை குடும்பத்துடன் வக்கீல் தற்கொலை

கடன் தொல்லை குடும்பத்துடன் வக்கீல் தற்கொலை

கோவை : கடன் தொல்லையால் மனமுடைந்த வக்கீல், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.உடுமலையை சேர்ந்தவர் சண்முகஜோதி(54); சட்டம் பயின்றவர். கோவை, ஆர்.எஸ்.புரம், வெங்கட்ராமன் வீதியில் தனது மனைவி சந்தானலட்சுமி(50), மகள்கள் வாசுகி(24), வைஷ்ணவி(20) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சண்முகஜோதி தங்கநகை மற்றும் பங்கு சந்தை தொழிலில் ஈடுபட்டு வந்தார். மகள்களில் வாசுகி எச்.டி.எப்.சி., வங்கியிலும், வைஷ்ணவி ஏர்டெல் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.தங்கநகை மற்றும் பங்குசந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க சண்முகஜோதி வெளியில் கடன் பெற்றிருந்தார். கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் மனமுடைந்த இவர், நேற்று காலை தனது குடும்பத்தினருடன் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன் சண்முகஜோதி உடுமலையில் உள்ள தனது சகோதரர் பொன்னுசாமிக்கு, 'குடும்பத்துடன் தான் தற்கொலை செய்து கொள்வதாக' போனில் தகவல் தெரிவித்துள்ளார். பதட்டமடைந்த பொன்னுசாமி, சண்முகஜோதி மற்றும் அவரது மகள்களின் மொபைல்போன்களை தொடர்பு கொண்டார்; யாரும் பேசவில்லை. இதையடுத்து, கோவையில் வசிக்கும் தனது உறவினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பொன்னுசாமி, அவரை சண்முகஜோதியின் வீட்டுக்கு சென்று பார்த்து வருமாறு அனுப்பியுள்ளார்.சண்முகஜோதியின் வீட்டுக்கு சென்ற உறவினர், வீடு திறந்திருப்பதையும், உள்ளே சண்முகஜோதி, அவரது மனைவி மற்றும் மகள்கள் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து, பொன்னுசாமிக்கு தெரிவித்தார். தகவலறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி