உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருக்குறள் பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ, மாணவியர்

திருக்குறள் பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ, மாணவியர்

கோவை : ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி பிரிவு என நான்கு பிரிவுகளில் மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப்போட்டிகள் நடந்தது.இடைநிலைப்பிரிவில் ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரும், உயர்நிலை பிரிவில் ஒன்பதாம், 10ம் வகுப்பு மாணவ, மாணவியரும், மேல்நிலை பிரிவில் 11,12ம் வகுப்பு மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.

ஓவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடம் பெற்றவர்கள் விவரம்:இடைநிலை பிரிவில் கோபி செட்டிபாளையம் அமலா மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த காமில் ரெக்ஸ், திருச்செங்கோடு எஸ்.பி.கே., மெட்ரிக் மேல்நிலை பள்ளி சுவாதிகா ஆகியோர். உயர்நிலை பிரிவில் மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் மேல்நிலை பள்ளி, சோமையம் பாளையம் யுவபாரதி பப்ளிக் பள்ளி நரேன் கவுதம் ஆகியோரும்.மேல்நிலை பள்ளி பிரிவில் கோவை கேந்திர வித்யாலயா பள்ளி ஹரினி, காந்திநகர் ஸ்ரீநிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி விசாலி ஆகியோரும். கல்லூரி பிரிவில் கோவை அரசுக்கல்லூரி இளஞ்செழியன், பாரதியார் பல்கலை ஆனந்தன் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி பரிசளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ