உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ஜபல்பூர் -வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

கோவை ஜபல்பூர் -வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

கோவை;பாலக்காடு, சொரனுார், மங்களூரு வழியாக கோவை - ஜபல்பூர் (மத்திய பிரதேசம்) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஜபல்பூர் -- கோவை இடையே வாராந்திர சிறப்பு ரயில் (02198) இன்று முதல் மார்ச் 29ம் தேதி வரை, ஜபல்பூரில் இருந்து வெள்ளி அன்று இரவு 11:50 மணிக்குப் புறப்பட்டு, ஞாயிறு அன்று பகல் 2:40 மணிக்கு கோவை வந்தடையும்.கோவை - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02197) 15ம் தேதி முதல் ஏப்., 1ம் தேதி வரை திங்கள் அன்று கோவையிலிருந்து மாலை 5:05 மணிக்கு புறப்பட்டு புதன் அன்று காலை 8:45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி