உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் கடை திறக்க கோதபாளையத்தில் எதிர்ப்பு

டாஸ்மாக் கடை திறக்க கோதபாளையத்தில் எதிர்ப்பு

சூலூர் : சூலூர் அருகே 'டாஸ்மாக்' கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூலூர்,கோதபாளையம் கிராமமக்கள் 'டாஸ்மாக்' கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எங்கள் ஊரில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு அரசு துவக்கப்பள்ளி, அங்காளம்மன் கோவில், அங்கன்வாடி மையம், பால் சொசைட்டி உள்ளிட்டவை உள்ளன. தறி மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அருகில் உள்ள செம்மாண்டாம்பாளையம் கிராமத்தில் செயல்படும் 'டாஸ்மாக்' கடையை( கடை எண்: 2268) கோதபாளையத்துக்கு மாற்ற உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பொதுஅமைதிக்கு பாதிப்பு ஏற்படும். மாணவர்கள், இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு உள்ளாவது அதிகரிக்கும். எனவே எங்கள் ஊரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து 'டாஸ்மாக்' மண்டல மேலாளர் சுப்பிரமணியம் கூறுகையில்,'' செம்மாண்டம்பாளையம் கடையில் பார் வசதி இல்லை. எனவே அந்த கடையை கோதபாளையத்தில் பார் வசதியுடன் திறக்க பரிசீலனை செய்தோம். ஆனால், அங்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செம்மாண்டம்பாளையத்திலும் கடையை வேறு ஊருக்கு மாற்ற எதிர்ப்பு வந்துள்ளது. தற்போது உள்ள டாஸ்மாக் கடையில் பார் வசதி செய்ய பரிசீலித்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை