உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் சாலை பாதுகாப்பு படை துவக்க விழா

மாணவர் சாலை பாதுகாப்பு படை துவக்க விழா

கோவை:கோவை, ராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்புபடை துவக்க விழா நேற்று நடந்தது.இப்பகுதியில் உள்ள ஐந்து பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 125 மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர்.பள்ளி தலைமையாசிரியர் ராமதாஸ் வரவேற்றார். கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமை வகித்து, சாலை பாதுகாப்புப் படையை துவக்கி வைத்து மாணவ, மாண வியருக்கு சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார்.தலைமை டிராபிக் வார்டன் மகேஷ் பேசுகையில்,''சாலை பாதுகாப்புப் படையில் சேரும் மாணவ, மாணவியருக்கு டிராபிக் வார்டன் பிரிவு சார்பில் சீருடை வழங்கப்படும்'' என்றார். சாலை பாதுகாப்புப் படையில் உள்ள மாணவ, மாணவியர் பணியாற்ற வேண்டிய பணிகள், பெற்றோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வுகள் குறித்து விளக்கப்பட்டது.போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் காஜா மைதீன், உதவி கமிஷனர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை