உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிக்கு சமத்துவபுரம் வீடு

மாற்றுத்திறனாளிக்கு சமத்துவபுரம் வீடு

கோவை : போத்தனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு, சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. போத்தனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாவதி. இவரது கணவர் பாஸ்கரன், வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதி, 'தங்களுக்கு சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்று கோரி, கடந்த வாரம், கோவை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மனுவை விசாரித்த கலெக்டர் கருணாகரன், வெள்ளக்கிணர் சமத்துவபுரத்தில் காலியாக இருந்த வீட்டை, பிரபாவதிக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ