உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேசிய கிரிக்கெட் போட்டிக்கு கோவை மாணவன் தேர்வு

 தேசிய கிரிக்கெட் போட்டிக்கு கோவை மாணவன் தேர்வு

கோவை: ராஜஸ்தானில் நடக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, கோவையை சேர்ந்த மாணவன் தேர்வு செய்யப்பட்டார். இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ளி டி.இ.ஏ., பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த சாய் வித்யா நிகேதன் மேல்நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் விக்னேஷ்பிரபு தேர்வு செய்யப்பட்டார். இதன் வாயிலாக, இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், ராஜஸ்தானில், வரும் ஜன., 19 முதல் ஜன., 24ம் தேதி வரை நடக்க உள்ள, தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவனை பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ