உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாணவருக்கு நீச்சல் போட்டியில் தங்கம் 

கோவை மாணவருக்கு நீச்சல் போட்டியில் தங்கம் 

கோவை;சென்னையில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான, மாநில அளவிலான நீச்சல் போட்டியில், கோவையை சேர்ந்த மாணவர் மூன்று தங்கம் வென்றார். பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான, பீச் வாலிபால் மற்றும் நீச்சல் போட்டிகள் சென்னையில் நடந்தன. இதன் நீச்சல் போட்டி, சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் நடந்தது. இப்போட்டியில், கோவை மாவட்டம் சார்பில் இந்துஸ்தான் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர் கபிலன் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றார். இதில் 50மீ., பேக் ஸ்ட்ரோக், 100மீ., பேக் ஸ்ட்ரோக் மற்றும் 200மீ., பிரீஸ்டைல் ஆகிய மூன்று போட்டிகளில், தங்கம் வென்று அசத்தினார். வெற்றி பெற்ற மாணவரை, பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி