உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கார் ஓட்டுநர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

 கார் ஓட்டுநர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கோவை: மாவட்ட நிர்வாகம், 'கோவை ஸ்கால்' கூட்டமைப்பு இணைந்து, சொந்தமாக கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களுக்கான ஒரு நாள் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி முகாம், சில வாரங்களுக்கு முன் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற, பயிற்சி பெற்ற சொந்தமாக கார் வைத்திருக்கும் 66 ஓட்டுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஹோட்டல் கிராண்ட் ரிஜென்ட்டில் நடந்தது. கலெக்டர் பவன்குமார், இவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில், ''கார் ஓட்டுநர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு முதல் தொடர்பாகவும், உள்ளூர் வழிகாட்டுகளாகவும் செயல்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் பலவிதமான அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்பாக இருக்கிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதோடு, உள்ளூர் தகவல்களையும் பகிர்ந்து, சுற்றுலா பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த, சிறப்பாக செயல்பட வேண்டும்,'' என்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ''கோவை ஸ்கால்' கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திர குமார், ஹோட் டல் கிராண்ட் ரிஜென்ட் பொது மேலாளர் நிஜோ அகஸ்டின் உட்பட பலர் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை