உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரம் கொடுத்த கமிஷனர்; மாணவனுக்கு புது வாழ்வு

கரம் கொடுத்த கமிஷனர்; மாணவனுக்கு புது வாழ்வு

கோவை;கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனின் படிப்பு தொடர உதவிய போலீஸ் கமிஷனரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.கோவை மாநகரில், பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க போலீசாரால் 'ஆபரேஷன் ரீபூட்' என்ற திட்டத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக, 221 இடைநின்ற பள்ளி குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர்கள், கல்வித்துறை மூலமாக, இடைநின்ற மாணவர்களை போலீசார் கண்டறிந்து வருகின்றனர். அவர்களின் வீட்டுக்கு சென்று பள்ளி மாணவர்கள், பெற்றோர்களை சந்தித்து பேசி மீண்டும் பள்ளி செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதேபோல, போலீஸ் ஸ்டேஷன் வாரியாக, சந்தர்ப்ப சூழ்நிலையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களில், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவி வழங்க, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதுகுறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.அப்போது, ஆர்.எஸ்.,புரம் போலீசார், 2021ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட காமராஜபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனன், 23 என்பவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அதில், அவரது சகோதரர் பிரசாந்த், 19, குடும்ப சூழல் காரணமாக, கூலி வேலைக்கு சென்று வந்ததும், கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தியதும் தெரியவந்தது.இவருக்கு, தொண்டாமுத்துாரில் உள்ள அரசு கலைக் கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு சேர்ந்து மீண்டும் படிக்க தேவையான உதவிகளை கமிஷனர் மேற்கொண்டார். பிரசாத் தற்போது கல்லுாரி சென்று படித்து வருகிறார்.இவரது இந்த செயலை அறிந்த மக்கள் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை