மேலும் செய்திகள்
இளநீர் விலையில் மாற்றமில்லை
11-Aug-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், எவ்வித மாற்றமும் இன்றி, 45 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் இளநீர் வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேபோல, சிவப்பு இளநீர் வரத்தும் அதிகரித்துள்ளது. தவிர, தேவையும் உயர்ந்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் இளநீர் அறுவடை சுறுசுறுப்பாக முன்கூட்டியே நடைபெறுகிறது. வட மாநிலங்களில் இருந்து, புதிய நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இப்பகுதியில் இளநீர் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது, சிவப்பு இளநீரில் வெள்ளைப் பூச்சி தாக்கம் உள்ளது. தேவையான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி விவசாயிகள் அதனை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல, 'ஈரியோபைட்' எனும் சிலந்திப் பூச்சியின் தாக்குதலும் அதிகரித்துள்ளது. விவசாயிகள், உரிய முறையில் கண்காணித்து தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
11-Aug-2025