உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவர்களிடம் கலை, கலாசாரம் கொண்டு சேர்க்க கருத்தாளர் நியமனம்

 மாணவர்களிடம் கலை, கலாசாரம் கொண்டு சேர்க்க கருத்தாளர் நியமனம்

கோவை: கலை பண்பாட்டு வளங்கள் மற்றும் பயிற்சி மையம் சார்பில், கோவை மாவட்டத்திற்கு கருத்தாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கலை பண்பாட்டு வளங்கள் மற்றும் பயிற்சி மையம் என்பது, இந்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது, டில்லி, உதய்பூர், கவுகாத்தி மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு இடங்களில் செயல்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அதன்வழி மாணவர்களிடம் உள்ளூர் கலை, பண்பாடு மற்றும் கலாசாரத்தை கொண்டு சேர்க்கும் இலக்குடன், மாநில அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதன் கீழ் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் பல்வேறு பயிற்சிகளைப் பெற்று, அவற்றை பள்ளியில் செயல்படுத்திய பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை சுகுணா தேவி, தற்போது கோவை மாவட்ட கருத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகுணா தேவி கூறுகையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கலை பண்பாட்டு வளங்கள் மற்றும் பயிற்சி மையம் சார்பில், கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் மாவட்ட கருத்தாளர் நியமிக்கப்படுவது, இதுவே முதல்முறை. மாவட்டத்தில் உள்ள 50 ஆசிரியர்களுக்கும், 500 மலைவாழ் குழந்தைகளுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை