| ADDED : பிப் 24, 2024 01:54 AM
திருப்பூர்:பிளஸ் 2 செய்முறைத்தேர்வுக்காக, திருப்பூர் பள்ளி ஆய்வகத்தில் சமையல் வாசனை கமகமக்க, மாணவியர் உணவு தயாரித்து அசத்தினர்.தமிழகத்தில், 17 பள்ளிகளில் மட்டும் மேல்நிலை வகுப்புகளில் 'உணவு மேலாண்மை - சத்துணவியல் - மனையியல்' பாடப்பிரிவு உள்ளது; மொத்தம் 4,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் இப்பாடப்பிரிவுக்கான நேற்று நடந்த செய்முறைத்தேர்வில் 88 மாணவியர் பங்கேற்றனர்.புரூட் சாலட், பிரைடு ரைஸ், முட்டை மற்றும் பிரட் ஆம்லெட், வெஜிடபிள் பிரியாணி, வெஜிடபிள் புலாவ் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை தயாரித்து மாணவியர் அசத்தினர். கேஸ் அடுப்பு, வாணலி, பாத்திரம் சகிதம், உணவுப்பொருட்கள் வாசனையுடன் பள்ளி ஆய்வகம் கமகமத்தது. முன்னதாக, உணவு பொருட்கள் தயார் செய்வது, வழிமுறை குறித்து கேள்வி, பதிலுக்கு மாணவியர் விடையெழுதினர்.புறத்தேர்வராக பங்கேற்ற கோவை பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மனோன்மணி, பிரசன்டேஷன் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியை சாந்தி ஆகியோர், செய்முறைத் தேர்வை கண்காணித்து, மாணவியருக்கு மதிப்பெண் வழங்கினர்.