மேலும் செய்திகள்
'சைபர்' குற்றவாளி மிரட்டல்; வயதான தம்பதி தற்கொலை
29-Mar-2025
கோவை:கோவையைச் சேர்ந்த வாலிபரிடம், 1.46 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த, நீலகிரியைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன், 23. 'விநாயகா என்டர்பிரைசஸ்' மற்றும் 'விஜய் பார்மா' என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மருந்து கடை நடத்தும் தம்பதி சிவகுமார், 44, தாரண்யா மற்றும் சிவகுமாரின் உறவினரான ஹரிஸ் ஆகியோர் இவருக்கு பழக்கமாகினர்.சிவக்குமார் --- தாரண்யா தம்பதி, 'சிவகாமி ப்ளோரி டெக்' என்ற பெயரில் அலங்கார மலர்கள் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகக் கூறியுள்ளனர்.நிர்வாகத்தை ஹரிஸ் கவனித்து வருவதாகவும், தங்கள் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினர்.அதை நம்பி, கடந்தாண்டு அக்டோபரில், 1.01 கோடி ரூபாய், நவம்பரில் 45 லட்சம் ரூபாய் என, 1.46 கோடி ரூபாயை, அவர்கள் வங்கிக் கணக்கிற்கு சிவராமன் அனுப்பினார். பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும், லாப பணத்தை கொடுக்காததால், சிவகுமாரிடம், சிவராமன் கேட்டார். அதற்கு அவர் முறையாக பதிலளிக்கவில்லை.தம்பதி ஏற்கனவே பலரிடம் மோசடி செய்ததை அறிந்த சிவராமன், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், தம்பதியை கைது செய்து, தலைமறைவான ஹரிஷை தேடி வருகின்றனர். மூவரும் சேர்ந்து பலரிடம், 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். ஒரு லோடு ஆட்டோ, பி.எம்.டபிள்யு., கியா கார்னிவல், டொயோட்டா பார்ச்சுனர், பென்ஸ் நிறுவன கார்கள் உட்பட ஒன்பது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
29-Mar-2025