மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர்கள் கைது
28-Aug-2024
கோவில்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம், தலைமையில் போலீசார் நேற்று கீரணத்தம் புதுப்பாளையம் மயானம் அருகே ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். விசாரணையில், அவர் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வீரக்குமார், 34 எனவும், தற்போது கோவை, கோவில்மேடு பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. மேலும் இவர் மீது கஞ்சா பயன்படுத்தியது, விற்றது, திருட்டு என கோவை நகர் மற்றும் புறநகரில் 38 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. ஏற்கனவே பல போலீஸ் ஸ்டேஷன்களில் இவர் மீது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. பாக்கு திருடிய இருவர் கைது
கோவை மாவட்டம் காரமடை அருகே சீளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். பாக்கு விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் நேற்று முன் தினம், அத்துமீறி நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், அங்கிருந்து பாக்குகளை திருடி மூட்டையில் சேகரித்துக் கொண்டிருந்தனர்.இதனை பார்த்த, பக்கத்து தோட்டத்துக்காரர், ரமேஷுக்கு செல்போன் வாயிலாக தகவல் கொடுத்தார். பின், ரமேஷ் தனது மகனுடன் தோட்டத்திற்கு வந்து, பாக்குகளை திருடிக் கொண்டு இருந்த நபர்களை பிடித்து, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், பாக்கு திருடியவர்கள் மேட்டுப்பாளையம் கூடுதுறை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 கிலோ பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
28-Aug-2024