உள்ளூர் செய்திகள்

விமரிசை

வடவள்ளி: கந்த சஷ்டி விழாவையொட்டி, கோவை, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. கடந்த 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், நேற்றுமுன்தினம், சூரசம்ஹாரம், நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தன. நேற்று காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்களால், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு சுப்ரமணியசுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 10:30 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்களின் மொய் பணமாக, 2 லட்சத்து 43 ஆயிரத்து 39 ரூபாய் வசூலானது. பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, மலர் பல்லக்கில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டி விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள் நிறைவு செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை