மேலும் செய்திகள்
பாரதீய வித்யா பவனில் நடந்த ஆராவமுதாச்சாரியாரின் ஹரிகதை
4 minutes ago
சித்தி விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
5 minutes ago
மாணவி தற்கொலை விவகாரம் 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம்
2 hour(s) ago
கோவை: புதிய தொழிலாளர் குறியீடுகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்ததை, தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்கம் வரவேற்றுள்ளது. தமிழ்நாடு சிறு மற்றும் மிகச் சிறு தொழில் சங்க துணைத் தலைவர் சுருளிவேல் செய்திக்குறிப்பு: புதிய தொழிலாளர் குறியீடுகளை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்ததை வரவேற்கிறோம். 29 தனித்தனியான சட்டங்களை, 4 முக்கிய குறியீடுகளாக ஒருங்கிணைத்தது, தொழிலும், தொழிலாளர்களும் பயனடையும் முன்னேற்றமான மாற்றமாகும். அனைத்து ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவது கட்டாயம், ஒரு வருட சேவை முடித்தாலே, கிராஜுவிட்டி பெறும் உரிமை, இந்திய அளவில் ஒரே மாதிரியான குறைந்தபட்ச சம்பள அமைப்பு, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் குழப்பத்தை நீக்குகிறது. இந்த மாற்றங்கள், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உயர்த்துவதோடு, தொழில் வளர்ச்சி, வெளிப்படைத் தன்மை, மற்றும் வேலை வாய்ப்பின் முறையான அமைப்புகளை அதிகரிக்க உதவுகின்றன. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
4 minutes ago
5 minutes ago
2 hour(s) ago