உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் ரயில் பாதையை இரட்டை வழித்தடமாக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம் ரயில் பாதையை இரட்டை வழித்தடமாக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் ரயில் பாதையை இரட்டை வழித்தடமாக மாற்ற வேண்டும் என 15 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மேட்டுப்பாளையம் அனைத்து வணிகர் சங்கம், கோவை - மேட்டுப்பாளையம் ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக வியாபாரிகள் சம்மேளனம், உருளைக்கிழங்கு வர்த்தக சபை, மேட்டுப்பாளையம் லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட 15 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று மத்திய இணை அமைச்சர் எல். முருகனை, மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அம்மனுவில், கோவை - மேட்டுப்பாளையம் ரயில் பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றி தர வேண்டும். கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரயிலில் கூடுதல் டிரிப்புகள் இயக்கப்பட வேண்டும். மேட்டுப்பாளையம் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புறவழிச்சாலை அமைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், விடுக்கப்பட்டிருந்தன.மனுவை பெற்றுக் கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ