உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்

மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்

பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 3.15 கோடி ரூபாய் செலவில், பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு அமைக்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஓய்வு மண்டபம் கட்ட ஹிந்துசமய அறநிலையத்துறை திட்டமிட்டது.அதன்படி, பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசை தடுப்பு அமைக்க, 3.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேற்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.இதையடுத்து, கோவில் வளாகத்தில் பூமி பூஜை நடந்தது. அதில், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, உதவி ஆணையர் (பொறுப்பு) கைலாசமூர்த்தி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, தலைமை முறைதாரர் மனோகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை