உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு

புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்பு

ஆனைமலை : ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய வனச்சரக அலுவலர் பொறுப்பேற்றுள்ளார்.ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி வனச்சரக அலுவலராக வீரமணி பணியாற்றிவந்தார். அவர் தற்போது திருப்பூர் கோட்டத்தில் திருப்பூர் வனச்சரக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூடலூர் பகுதியில் வனச்சரக அலுவலராக பணியாற்றிய கணேஷ்ராம் பொள்ளாச்சி வனச்சரக அலுவலராக பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ