பெ.நா.பாளையம்;'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி- வினா போட்டியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில்களை அளித்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா'வுக்கு நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி- வினா போட்டி, 2018 முதல் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 150 பள்ளிகளில் நடக்கிறது. இப்போட்டிகளை, கோ-லோ நிறுவனம் மற்றும் சத்யா ஏஜென்சி இணைந்து வழங்குகிறது. யுவா பப்ளிக் பள்ளி
பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 170 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது.இதில், 'சி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஹர்சிந்தா, எட்டாம் வகுப்பு மாணவர் ஹரிபிரசாத் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் சத்யா அறிவரசு, முதல்வர் ராஜேஸ்வரி, பட்டம் ஒருங்கிணைப்பாளர் நதியா உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். அமிர்தா வித்யாலயம், நல்லாம்பாளையம்.
கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள இப்பள்ளியில் நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 500 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி-வினா போட்டி, மூன்று பிரிவுகளாக நடந்தது.இதில், 'சி' அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீஜன், பிரணவ் வர்ஷன் ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.இவர்களுக்கு, பள்ளி தாளாளர் சுவாமினி முக்தஅமிர்தா பிரணா, முதல்வர் பத்மஜா, சமூக அறிவியல் ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, லதா உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். ஆரிசன் அகாடமி பள்ளி
ஈச்சனாரி - மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள, 'ஆரிசன் அகாடமி' பள்ளியில் நடந்த, தகுதி சுற்று பொது அறிவு தேர்வு போட்டியில், 80 பேர் பங்கேற்றனர். தேர்வான, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். காலிறுதி மூன்று பிரிவுகளாக நடந்தது.இதில், 'சி' அணியின் ஆதித்யா(ஏழாம் வகுப்பு), ஞானேஷ்வர் (எட்டாம் வகுப்பு) ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகினர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் பொன்மணி சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள் நாகரத்தினம், கலைசெல்வி ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளி
ஒத்தக்கால் மண்டபத்திலுள்ள இப்பள்ளியில் நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 375 பேர் தேர்வு எழுதினர். தேர்வான, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். காலிறுதி, மூன்று பிரிவுகளாக நடந்தது. 'டி' அணியின் ஏழாம் வகுப்பு மாணவி கெய்ட்லின் லிட்வினா, ஆறாம் வகுப்பு மாணவர் ஆதித்யா ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகினர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் வெங்கட ஸ்ரீ சான்றிதழை வழங்கி வாழ்த்தினார். ஆசிரியர்கள் ஞானேஸ்வரி, கவிதா, ராஜேஸ் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர். மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்
இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 32 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட, 16 பேர், 8 அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி-- வினா போட்டி, 3 பிரிவுகளாக நடந்தது. இதில், 'பி' அணியை சேர்ந்த மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு மாணவியர் கிருஷ்ணபிரியா, சஞ்சனா ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதி போட்டிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி முதல்வர் சுலோச்சனா, ஆசிரியர்கள் ஜின்சி எலிசபெத், சாந்தி ஆகியோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். விக்டரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரவணம்பட்டி.
இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 80 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி, மூன்று பிரிவுளாக நடந்தது. இதில் 'ஜி' அணியை சேர்ந்த மாணவர் முறையே, 9ம் வகுப்பு நித்தின் மற்றும் 8ம் வகுப்பு நிஷாந்த் ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதி போட்டிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் அருணா, ஒருங்கிணைப்பாளர் கோமதி செல்வி, ஆசிரியர்கள் தீபா, பவானி தேவி, ஆனந்தகுமார் உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.-