உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள்

தபால் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள்

ஆனைமலை : ஆனைமலை அடுத்த திவான்சாபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் சென்றனர்.ஆனைமலை அடுத்த திவான்சாபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக திவான்சாபுதூர் தபால் நிலையம் சென்றனர். அங்கு தபால்கள் வருவது, முத்திரையிடுவது, தபால்கள் பிரிக்கப்பட்டு விலாசங்களுக்கு அனுப்புவது பற்றி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அஞ்சல் வில்லைகள், பண விடைகள், அஞ்சலக தொடர் வைப்பு கணக்கு, சிறுசேமிப்பு ஆகியவற்றை பற்றியும் பயிற்சியளிக்கப்பட்டது. தற்போது அஞ்சலகங்கள் தபால் பட்டுவாடா மற்றும் வங்கிப்பணிகளையும் செய்துவருவது குறித்தும் அஞ்சல ஊழியர்களால் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், உதவி ஆசிரியர்கள் சரஸ்வதி, லட்சுமி, முரளிதரன் ஆகியோர் களப்பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனைமலை கிளை நூலகத்திற்கு ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூலகம் செயல்படும் விதம் குறித்து பயிற்சி பெற சென்றனர். நூலக நடைமுறைகள், நூலகத்தினால் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற விழிப்புணர்வை ஆனைமலை கிளை நூலகர் ஆனந்தகுமார் விளக்கினார். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை