| ADDED : ஆக 11, 2011 11:22 PM
பேரூர் : தொண்டாமுத்தூர், புள்ளாக்கவுண்டன்புதூ ரில், விவசாயிகளுக்கான உர விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழிப்புணர்வு முகாமில், கோவை உதவி வேளாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ தலைமை வகித்து பேசுகையில், ''மண் பரிசோதனை செய்து உரமிட்டால் மண்ணின் வளம் கெடாமல் காப்பற்றப்படுவதோடு, விவசாயிகளின் பணமும் வீணாகாமல் இருக்கும். விதைப்பதற்கு முன் விதைகளை விதைநேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும்,''என்றார். வேளாண் அலுவலர் கவிதா பேசுகையில், ''உயிர் உரங்கள் இடுவதால் இயற்கை சத்துக்கள் மற்றும் பயிர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்,'' என்றார். முகாமில், எம்.எப்.எல்., நிறுவன மேலாளர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெயபிரகாஷ், சுப்ரமணி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.