உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "வாருங்கள் வாழலாம் புத்தகம் வெளியீடு

"வாருங்கள் வாழலாம் புத்தகம் வெளியீடு

சரவணம்பட்டி : சரவணம்பட்டியில், 'வாருங்கள் வாழலாம்' புத்தக வெளியீட்டு விழா நடந்தது.கோவை, சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரியில், ஆசிரியர் சதாசிவம் எழுதிய 'வாருங்கள் வாழலாம்' புத்தக வெளியீட்டு விழா நடந்தது.பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், ''புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மாறி வருகிறது. புத்தகங்கள் வழிகாட்டுதலாக இருப்பதோடு, தேவையான சமயத்தில் அவற்றில் உள்ள கருத்துக்கள் உற்ற நண்பரை போன்று உதவும். புத்தகங்கள் வாழ்க்கையில் அனுபவங்களாக இருந்து, சிறப்பான வாழ்க்கையை வாழ உதவுகின்றன,'' என்றார். விழாவில், கல்லூரி ஆலோசகர் குழந்தைவேலு பங்கேற்றார். பேராசிரியர் தங்கசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி