உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூராட்சிகளுக்கு சிறப்பு தேர்தல் தொலைபேசி

பேரூராட்சிகளுக்கு சிறப்பு தேர்தல் தொலைபேசி

பெ.நா.பாளையம் : உள்ளாட்சி தேர்தலையொட்டி பேரூராட்சிக ளுக்கு புதிய சிறப்பு தொலைபேசி வசதி செய்யப்பட வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சி களுக்கான தேர்தல் அக்., 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. தேர்தல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள சிறப்பு தொலைபேசி இணைப்பை அனைத்து பேரூராட்சிகளும் பெற்றுக் கொள்ள வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பேரூராட்சிகளுக்கு ஏற்கனவே ஒரு தொலைபேசி இணைப்பு உள்ளது. இதில், அங்குள்ள தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் அடிக்கடி பயன்படுத்துவதால் தொலைபேசி எப்போதும் 'பிசி'யாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால், தேர்தலுக்காக புதிய தொலைபேசி இணைப்பை 500 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளும்படி, மாநில தேர்தல் ஆணையம் பேரூராட்சிகளுக்கு உத்தரவிட் டுள்ளது. இணைப்பு பெற்றவுடன் அதை தனியறையில் வைக்க வேண்டும். அறையில் அலுவலர் ஒருவரை நியமனம் செய்து, தேர்தல் தொடர்பாக தொலைபேசியில் பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும்என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. பேரூராட்சிகள் தேர்தல் தொலைபேசி இணைப்பு பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ