உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தே.மு.தி.க.,வினர் மனு தாக்கல்

தே.மு.தி.க.,வினர் மனு தாக்கல்

குறிச்சி : வெள்ளலூர் பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு, தே.மு.தி.க., சார்பில் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். வெள்ளலூர் பேரூராட்சியின் தற்போதைய துணைத்தலைவராக, கோவை மாவட்ட தே.மு.தி.க., தொழிற்சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளார். வரும் தேர்தலில், இவர் பேரூராட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார், செந்தில்குமார். உடன், ஈஸ்வரன்(2வது வார்டு), கமலகண்ணன்(3வது வார்டு), மயில்வாகனன்(6வது வார்டு), செந்தில்குமார்(7வது வார்டு), வரதராஜ்(10வது வார்டு), சுகன்யா(11வது வார்டு), கனகராஜ்(12வது வார்டு), மகேஸ்வரி(15வது வார்டு) ஆகியோரும், கவுன்சிலர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை