மேலும் செய்திகள்
வெங்கடாசலபதி நகரை காப்பாற்று பெருமாளே!
16 minutes ago
மாற்றுத்திறனாளிகள் அசத்திய வீல்ஸ் மாரத்தான் போட்டி
19 minutes ago
கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற, ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 550 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். இதில், 'டி' அணியின் சாய் திலக், யாழினி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி முதல்வர் பங்கஜ் இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார். மாணவர்களின் சிந்தனையாற்றல், பொது அறிவு மற்றும் படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க, 'தினமலர்' சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
16 minutes ago
19 minutes ago