| ADDED : பிப் 06, 2024 01:32 AM
கோவை;கோவை மாநகராட்சி, சூயஸ் மற்றும் எஸ்.என்.எஸ்., நிறுவனங்கள் இணைந்து, 'கோவை இன்னோவென்ட் 2.0' என்ற, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.எஸ்.என்.எஸ்., நர்சிங் கல்லுாரியில் நடந்த நிகழ்வில், சூயஸ் நிறுவனங்களை சேர்ந்த அமித் நியோகி, சங்கரம் பட்டநாயக், சத்யனம், நிஷாத், சோலினாஸ் இன்டக்ரிட்டி நிறுவனத்தை சேர்ந்த மொய்னக் பானர்ஜி, இன்பரான் நிறுவனத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், புளூயிட்ரிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அனந்த கிருஷ்ணன், போரூஜ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சல் தாஸ்குப்தா ஆகியோர் உரையாற்றினார்.ஜார்ஜ் பிரஸ்சர் பைப்பிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அனுநாக் கோட், ஜீத் தாபா, அமோல் ஷிண்டே ஆகியோரும், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் கஜேந்திரன், திருமலைராஜா, கீதா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.