மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
கோவை; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'நலந்தானா' என்ற பெயரில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கோவை கிக்கானி பள்ளி அரங்கில் கடந்த இரண்டு நாட்கள் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் மற்றும் இருதயநோய் மருத்துவர் முரளீதரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.பாலமுருகன் பேசுகையில், ''உடல் பருமன் அதிகரித்தால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. நமது உணவு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். புற்றுநோய் குறித்து அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்,'' என்றார்.முரளீதரன் பேசுகையில், ''மாரடைப்பு ஏற்பட்டால் முதல் ஒரு மணிநேரம் 'தங்கம்' ஆக பார்க்க வேண்டும். எப்போது, சிறு சந்தேகம் இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். நமது, சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது உள்ள சூழலில் நோய் நமக்கு வருவதில்லை; நாம் தான் நோயை அழைக்கிறோம். உணவு முறை மாற்றம், தினசரி நடைபயிற்சி போன்றவை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
24-Jun-2025