காய்கறிகள் வரத்து குறைவு விலையும் சரிவால் அதிருப்தி
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்ததால், விவசாயிகள் அதிருப்தியடைந்தனர்.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி (15 கிலோ பெட்டி) - 230 ரூபாய், தேங்காய் ஒன்று -- 36, கத்தரிக்காய் கிலோ -- 10, வெண்டைக்காய் --- 30, முள்ளங்கி --- 20, வெள்ளரிக்காய் --- 15, பூசணிக்காய் --- 12, அரசாணிக்காய் --- 10, பாகற்காய் --- 40, புடலை --- 25, சுரைக்காய் --- 15, பீர்க்கங்காய் --- 45, பீட்ரூட் --- 15, அவரைக்காய் --- 35, பச்சை மிளகாய் --- 30 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை விட, தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) --- 70 ரூபாய், கத்திரிக்காய் மற்றும் பூசணிக்காய் -- 3, வெள்ளரிக்காய் மற்றும் பாகற்காய் -- 5, அரசாணிக்காய் -- 2 புடலை --- 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும், முள்ளங்கி --- 7, சுரைக்காய் --- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. காய்கறி வரத்து குறைந்து வரும் நிலையில், விலையும் சரிந்து வருவதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.வியாபாரிகள் கூறியதாவது, கடந்த வாரத்தை காட்டிலும், அனைத்து காய்கறிகளும் நேற்று ஆயிரம் கிலோ வரை வரத்து குறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது,' என்றனர்.