உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவசர கூட்டத்துக்கு அழைப்பில்லை: தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்

அவசர கூட்டத்துக்கு அழைப்பில்லை: தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கோட்டூர் பேரூராட்சியில் அவசர கூட்டத்துக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கூறி, அலுவலக கேட்டை பூட்டி தி.மு.க., கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த ராம கிருஷ்ணன் தலைவராக உள்ளார். இவர், நேற்று பேரூராட்சியில் நடந்த அவசர கூட்டத்துக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கூறி, தி.மு.க.,வை சேர்ந்த, பேரூராட்சி துணை தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில், தி.மு.க., கவுன்சிலர்கள், அலுவலக நுழைவுவாயில் கேட்டை பூட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமாபானுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கவுன்சிலர்கள் கூறுகையில், 'அவசர கூட்டத்துக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்,' என்றனர்.போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.ஆளுங்கட்சியை சேர்ந்த தலைவரை கண்டித்து, அக்கட்சி கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி