உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  திறந்த வெளியில் கட்ட வேண்டாம் வளர்ப்பு மாடுகளுக்கு சளி பிடிக்கும் கால்நடை இணை இயக்குனர் அறிவுறுத்தல்

 திறந்த வெளியில் கட்ட வேண்டாம் வளர்ப்பு மாடுகளுக்கு சளி பிடிக்கும் கால்நடை இணை இயக்குனர் அறிவுறுத்தல்

கோவை: பனிக்காலம் துவங்க இருப்பதால், கால்நடைகளை திறந்த வெளியில் கட்டி வைக்க வேண்டாம் என, கால்நடை இணை இயக்குனர் மகாலிங்கம் அறிவுறுத்தி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி முடிந்துள்ளது.கால்புண் மற்றும் வாய்புண் வராமல் தடுக்க, ஆண்டுக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் போடப்பட்டது. மீண்டும் ஜனவரியில் போடப்படும். மழை மற்றும் பனிக்காலத்தில், கால்நடைகளை குறிப்பாக வீட்டில் வளர்க்கும்கறவை மாடுகள் மற்றும் காளை மாடுகளை, திறந்த வெளியில் கட்டி வைக்கக்கூடாது. மரத்தில் அடியில், மின் கம்பங்களில் கட்டி வைக்க வேண்டாம். ஈரம் இல்லாத இடத்தில் கூடாரம் அல்லது கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும். பனி துவங்கி இருப்பதால் சில நோய் தொற்று வர வாய்ப்பு உள்ளது. மாடுகளுக்கு சளி ஏற்படவும், செரிமான கோளாறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தீவனம் வைத்த பிறகு வெண்ணீர் வைக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் இருந்தால், கால்நடை மருத்துவரை உடனே அணுக வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை