மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
4 hour(s) ago
நாளைய மின்தடை
4 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
4 hour(s) ago
பொள்ளாச்சி;வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று, 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், சூழலுக்கு ஏற்றவாறு உடலின் வெப்ப நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.வெயிலால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக் கூடும். கோடையில் ஏற்படும் வெப்ப பாதிப்பில் இருந்து, மக்கள் தங்களை தற்காத்து கொள்ளலாம்.இது குறித்து, பொள்ளாச்சி தெற்கு வட்டார மருத்துவ மருத்துவர் ராஜ்குமார் கூறியதாவது: வெயில் காலங்களில், உடலில் நீர்ச்சத்து குறையாமல் சமநிலையில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலத்தில், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக அதிகளவு நீர்ச்சத்து வெளியேறும்.நீர்ச்சத்து குறைந்தால், தசைவலி, அதீத அசதி, மயக்கம் என பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும். எனவே, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.தேவையின்றி வெயிலில் உலவுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல, நீராகாரமான ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்தலாம். காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருத்தல் வேண்டும். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் போது, உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago