உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலங்கலாக வந்தது குடிநீர்: குடித்து கவுன்சிலர் ஸ்டன்ட்

கலங்கலாக வந்தது குடிநீர்: குடித்து கவுன்சிலர் ஸ்டன்ட்

கோவை:கோவை மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட காளியம்மன் வீதியில் உள்ள வீடுகளுக்கு, 12 நாட்களுக்கு பின் நேற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தண்ணீர் கலங்கலாக இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் காயத்ரி, மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது, சிறுவாணி குடிநீரையும், பில்லுார்-3 திட்டத்தில் பெறப்படும் தண்ணீரையும் கலந்து கொடுப்பது தெரியவந்தது.பில்லுார்-3 திட்டத்தில் எடுக்கப்படும் தண்ணீர், புது குழாயில் மண் கலந்து வருவதால், கலங்கலாக இருக்கிறது. இருப்பினும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, தரத்தை பரிசோதனை செய்து, வழங்கப்படுவதாக அலுவலர்கள் கூறினர்.சிறுவாணியில் இருந்து தரப்படும் குடிநீர் அளவு குறைவாக இருப்பதால், பில்லுார்-3ல் எடுக்கப்படும் தண்ணீர் வினியோகிப்பதாக, அப்பகுதி மக்களிடம், கவுன்சிலர் காயத்ரி விளக்கி, சமாதானம் செய்தார். குடிநீரின் தரத்தை உறுதி செய்து காட்டுவதற்காக, அவரே குடித்துக் காண்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ