| ADDED : மார் 13, 2024 10:26 PM
கோவை : வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா,25. கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுனராக பணிக்கு சேர்ந்ததால், சமூக ஊடகங்களில் பிரபலமானார். டிரைவர் பணியிலிருந்து விலகி, யூ டியூப் சேனல் நடத்தி, அவ்வப்போது வீடியோ வெளியிட்டார். கடந்த 2ம் தேதி, சத்தி ரோடு, டெக்ஸ்டூல் பாலம் அருகில், 'நோ பார்க்கிங்' பகுதியில் ஷர்மிளா கார் நிறுத்தியதை, போலீஸ் எஸ்.ஐ., ராஜேஸ்வரி தட்டி கேட்டதால், அவரை மிரட்டியதோடு, எஸ்.ஐ., குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்டார். புகாரின் பேரில், ஷர்மிளா மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்ஜாமின் கேட்டு, அவர் தாக்கல் செய்த மனு, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக, மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.