உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிரைவர் தற்கொலை; போலீசார் விசாரணை

டிரைவர் தற்கொலை; போலீசார் விசாரணை

ஆனைமலை;ஆனைமலை அருகே, டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஆனைமலை, வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த கார் டிரைவர் அருண்குமார்,27. இவர், மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த, இரண்டு நாட்களாக மனைவி பேசாததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்று விட்டு வழக்கம் போல வீட்டுக்கு வந்தவர், தனி அறையில் 'டிவி' நிகழ்ச்சிகளை பார்த்துள்ளார். அவரது மனைவி சமையல் அறையில் இருந்தார். நீண்ட நேரமாகியும் அருண்குமார் வெளியே வராததால், சந்தேகமடைந்த மனைவி, மாமியாருக்கு தகவல் தெரிவித்தார்.உறவினர்கள் அனைவரும் வந்து, அருண்குமார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை