உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆற்றங்கரையில் கழிவு குவிப்பு

ஆற்றங்கரையில் கழிவு குவிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றின் கரையில் கழிவு குவிப்பதால், நீரின் தன்மை பாதிக்கிறது.ஆழியாறு ஆற்றின் வழித்தடத்தில் பல இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. இந்நிலையில், அம்பராம்பாளையம் பகுதியில் ஆற்றங்கரையில் இறைச்சிக்கழிவு உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் குவிக்கப்படுகிறது.பழைய படுக்கைகள், மெத்தை, பயன்படுத்திய துணிகள், பழைய பொருட்கள் என, ஏராளமான திடக்கழிவு குவிப்பதால், சுகாதாரம் பாதிக்கிறது. மழை காலத்தில் இக்கழிவுகள் ஆற்றில் கலக்கும் போது, ஆற்று நீரின் தன்மையும் பாதிக்கிறது. இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை