உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாரதா மில் சாலையிலே தூசு; நடந்து செல்வோர் அவஸ்தை

சாரதா மில் சாலையிலே தூசு; நடந்து செல்வோர் அவஸ்தை

போத்தனூர்:சுந்தராபுரத்திலிருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் சாலையில், பாதாள சாக்கடை பணி நடக்கிறது. கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, இரவு நேரத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் 'மேன்ஹோல்' அமைக்கப்படுகிறது. பின் அதனை சுற்றி மண் போட்டு மூடப்படுகிறது.அவ்வாறு மண் போட்டு மூடும்போது, அதிக மண் சாலையிலேயே விடப்படுகிறது. இதனை அப்புறப்படுத்த, யாரும் முன் வருவதில்லை.இதனால் வாகனங்கள் குறிப்பாக, கனரக வாகனங்கள் செல்லும்போது அதிக தூாசு ஏற்படுகிறது. நடந்து செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். சில கடைக்காரர்கள் தண்ணீர் தெளித்து, தூாசு பரவலை தடுக்கின்றனர். அதிகப்படியான மண்ணை அப்புறப்படுத்தினால் நல்லது. அதிகாரிகள் கவனிப்பார்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி