உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தீ பற்றி மூதாட்டி பலி

 தீ பற்றி மூதாட்டி பலி

போத்தனூர்: பி.கே.புதூர், பத்ரகாளியம்மன் வீதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது தாய் லட்சுமி தேவி, 90, நரசிம்மபுரம், ஐயப்பன் நகரில் வசித்து வந்தார். கடந்த, 25ல் வேணுகோபால் தனது தாயாரின் வீட்டிலிருந்தார். அப்போது லட்சுமி தேவி வீட்டின் முன் வெளியே குப்பை கழிவிற்கு தீ வைத்தார். எதிர்பாராவிதமாக, தீ அவரது சேலையில் பற்றியதால் சத்தமிட்டார். வேணுகோபால் வெளியே வந்து தீயை அணைத்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார். குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ