உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

வடவள்ளி; மின்சார சிக்கன வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி வடவள்ளியில் நேற்று நடந்தது.வடவள்ளியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். இப்பேரணி, மருதமலை ரோடு, வடவள்ளி பஸ் ஸ்டாப் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்து நிறைவடைந்தது. பேரணியில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற பதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதில், மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை