உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் தலைமையில், சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கமிஷனர் அமுதா, நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கோலப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.இதை அடுத்து அலுவலக வளாகத்தில், மக்கள் பிரதிநிதிகள், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து, சமத்துவ பொங்கல் வைத்தனர். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வார்டு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கோலப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மின் கண்காணிப்பாளர் திருமூர்த்தி வரவேற்றார். மின் கம்பியாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை