உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ முகாமில் 100 பேருக்கு பரிசோதனை

மருத்துவ முகாமில் 100 பேருக்கு பரிசோதனை

அன்னுார்:அன்னுார், தாசபளஞ்சிக மண்டபத்தில், மேட்டுப்பாளையம், அரசு ரத்த வங்கி, பொகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாசபளஞ்சிக மாதர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமில், மருத்துவ அலுவலர் ராம் தீபிகா பேசுகையில், ரத்த தானம் செய்வதால், பல உயிர்களை காப்பாற்றலாம்.ரத்த தானம் செய்தால் 48 மணி நேரத்திற்குள் புதிய ரத்தம் ஊறிவிடும். புதிய ரத்தம் உருவாவதால் உடல் நலம் மேம்படும், என்றார். முகாமில் 15 பேர் ரத்த தானம் செய்தனர். இதையடுத்து பளஞ்சிகா மருத்துவமனை சார்பில், பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் 100 பேருக்கு, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்னிந்திய மாதர் சங்கம், அன்னுார் இளைஞர் சங்கம், அன்னுார் மாதர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி