உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஏற்றுமதி கடன் தவணை கால நீட்டிப்பு : சைமா வரவேற்பு

 ஏற்றுமதி கடன் தவணை கால நீட்டிப்பு : சைமா வரவேற்பு

கோவை: ஜவுளித் துறையில் ஏற்றுமதிக்கான கடன் தவணைக்கு கால நீட்டிப்பு வழங்கியுள்ள மத்திய அரசுக்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது. தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் துரை பழனிசாமி அறிக்கை: அமெரிக்கா விதித்த வரியால் பாதிப்படைந்துள்ள ஜவுளித்தொழிலுக்கு, புத்துணர்வு ஊட்டும் வகையில், முலதன செயல்பாட்டுக்கான கடன் தவணை மத்திய அரசு நீட்டித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையில், ரிசர்வ் வங்கி, ஏற்றுமதி தொகையை திரும்ப அனுப்புவதற்கான கால அளவையும் ஒன்பது மாதங்களிலிருந்து 15 மாதங்களாக நீடித்துள்ளது. அடுத்து ஆண்டு மார்ச் வரையிலான ஏற்றுமதிக்கு முந்தைய, பிந்தைய கடன் கால அளவையும் 450 நாட்களாக உயர்த்தியுள்ளது. தற்போதைய சவாலான நிலையிலும், கடன் சுமையை குறைக்கும் விதமாகவும், வணிகத்தில் பணப்புழக்கத்தை உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. ஏற்றுமதியை எளிதாக மேற்கொள்ள இது உதவும். இந்த நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருக்கு சைமா நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இதே சலுகையை ஸ்பின்னிங், நெசவு மற்றும் சாய, ஜவுளி தொழில்களுக்கும் நீட்டிக்க வேண்டும். இரண்டு இலக்க எச்.எஸ். கோடு 52, 54, 55, 60க்கும் நீட்டிக்க வேண்டும். நிதி நெருக்கடியில் உள்ள இந்த நிறுவனங்கள், கடன் தவணை தவறி, செயலற்ற சொத்தாக அறிவிக்கும் நிலையை தவிர்க்க உதவ வேண்டும். ஏற்றுமதியால், இந்த துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை